ஆந்திராவில் சமீபத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் , விசாகா சுத்திகரிப்பு நவீனமயமாக்கல் திட்டத்தைத் தொடங்கியது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, உலகின் மிகப்பெரிய அணுஉலை விசாகப்பட்டினத்திற்கு வரவுள்ளது.
இந்த அணுஉலையானது, 71.5 மீட்டர் நீளமும், 12.2 மீட்டர் அகலமும், 7.74 மீட்டர் உயரமும், 2200 டன் எடையும் கொண்டது ஆகும். இது ஜெட்டி பகுதியிலிருந்து சாலை மார்க்கமாகக் கொண்டுவரப்படுகிறது. சுமார் 768 சக்கரம் கொண்ட பிரமாண்ட ட்ரக்கில் இந்த அணுஉலை கொண்டு வரப்படுகிறது. இந்த வாகனம் செல்லும் வழியில், பொதுமக்கள் அணுஉலையை ஆச்சரியமாகப் பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பந்தயத்தின்போது பல்டி அடித்த மாருதி கார்...வைரல் வீடியோ!