ETV Bharat / bharat

உலகின் மிக உயரமான தபால் நிலையம் இப்போது புதிய தோற்றத்தில்! - இமாச்சலப் பிரதேசத்தில் உலகின் மிக உயரமான தபால் நிலையம்

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள உலகின் மிக உயரமான தபால் நிலையத்தை சீரமைத்து தபால் பெட்டி வடிவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரமான தபால் நிலையம்
உலகின் மிக உயரமான தபால் நிலையம்
author img

By

Published : Jun 14, 2022, 10:20 PM IST

லாஹவுல் (இமாச்சலப் பிரதேசம்): உலகின் மிக உயரமான தபால் நிலையம் ஹிக்கிம் கிராமம் அருகே ஸ்பிதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த தபால் நிலையம் சுமார் 14,567 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்தநிலையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் அஞ்சல் துறை புதிய முயற்சியை மேற்கொண்டது.

அந்த வகையில் பழைய தபால் நிலையத்தை சீரமைத்து தபால் பெட்டி வடிவில் புதிதாக மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய தபால் நிலையத்தில் அஞ்சல் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த தபால் நிலையம் முன் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பழைய தபால் நிலையம்
பழைய தபால் நிலையம்

மேலும், உலகின் மிக உயரமான தபால் நிலையமான இந்த தபால் நிலையத்திலிருந்து நம் ஊருக்கு கூட கடிதம் அனுப்பலாம். வழக்கம் போல் தபால் நிலையத்திலிருந்து அஞ்சல் அட்டை பெற்று முகவரி எழுதி அனுப்ப வேண்டும். விரைவில் தபால் நிலையம் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டிற்குல் கொண்டு வரப்படும் என்று அஞ்சல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தபால் நிலையம்
புதிய தபால் நிலையம்

இதையும் படிங்க: அஞ்சல் துறை அசத்தல் முயற்சி... ட்ரோன் மூலம் தபால் விநியோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.