ETV Bharat / bharat

World No Tobacco Day: புகையிலைக்கு அடிமையாகும் சிறுவர்கள்.. ஆய்வு முடிவுகளில் வெளியான அதிர்ச்சி தகவல்!

'உலகளாவிய இளைஞர் புகையிலை கணக்கெடுப்பு' (Global Youth Tobacco Survey) நடத்திய ஆய்வு முடிவுகளில் அதிர்ச்சி அளிக்கும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 31, 2023, 4:11 PM IST

Updated : Jun 1, 2023, 12:47 PM IST

லக்னோ: இந்திய அளவில் புகையிலை பிடிக்கும் சிறுவர்கள் குறித்து (GYTS) Global Youth Tobacco Survey அதாவது 'உலகளாவிய இளைஞர் புகையிலை கணக்கெடுப்பு' ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில், சுமார் 13 வயது முதல் 15 வயது வயதிலான குழந்தைகளில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

இதில், 38 சதவீதம் பேர் சிகரெட், 47 சதவீதம் பீடி மற்றும் 52 சதவீதம் பேர் புகையிலை உள்ளிட்டவைகளை பயன்படுத்துகிறார்கள் எனவும் இவர்கள் 10 வயதை கடப்பதற்கு முன்பே இந்த புகையிலை பழக்கத்திற்கு அடிமையாவதும் ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அளித்துள்ள இந்திய தன்னார்வ சுகாதார அமைப்பின் தலைமை நிர்வாகி பாவ்னா பி.முகோபாத்யாய், "இந்தியாவில் கடந்த 2016 முதல் 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி சுமார் 27 கோடி பேர் புகையிலை உட்கொள்வதாகவும் இதனால் ஏற்படும் கேன்சர் உள்ளிட்ட நோய்களால் ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய அளவில் உள்ள இளைஞர்கள் புகையிலை பயன்பாட்டை தொடங்க ஆரம்பிக்கும் வயது 18ஆக உள்ளது எனவும் பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவு புகையிலை பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

மேலும், "புகையிலை பயன்பாட்டால் சுமார் 25க்கும் மேற்பட்ட நோய்களும், 40க்கும் மேற்பட்ட புற்று நோய்களும் ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளது எனவும், அதிலும் குறிப்பாக, வாய் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய் மற்றும் மூளைக் கட்டி ஆகியவை ஏற்படும்" எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மருத்துவர் மற்றும் பேராசிரியர் சூர்ய காந்த் கூறுகையில், "புகையிலை பயன்பாட்டால் வரும் பிரச்சனைகள் குறித்து அறிந்தும் மக்கள் அதை கண்டுகொள்ளாமல் புகையிலையை பயன்படுத்துவதாக தெரிவித்தார். இந்த புகையிலையில் புற்று நோயை உருவாக்கும் 70 ரசாயன கூறுகள் உள்ளதாக குறிப்பிட்ட மருத்துவர் சூர்ய காந்த், அதில், நிகோடின் மற்றும் தார் ஆகியவை முதன்மை வகிப்பதாகவும் கூறினார்.

இது தொடர்பாக சர்வதேச மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் மருத்துவர் அபிஷேக் சுக்லா கூறுகையில், "சிகரெட் பயன்பாட்டை விட பீடி புகைப்பது உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் எனவும், நிகோடினுக்கு அடிமையான நபர் அதில் இருந்து மீண்டு வருது கடினம்" எனவும் தெரிவித்தார்.

பெண்கள் கருவுற்றிருக்கும்போது புகைபிடித்தால் அது குறை பிரசவத்திற்கு வழிவகை செய்யும் எனவும், புகைபிடிக்கும் நபர் அந்த செயலை செய்யும் போது அதன் பாதிப்பு 30 சதவீதம் அவர்களையும், 70 சதவீதம் அவரை சுற்றி இருப்பவர்களையும் சேர்கிறது எனவும் எஸ்.சி.திரிவேதி மெமோரியல் டிரஸ்ட் மருத்துவமனையின் மூத்த மகப்பேறு மருத்துவர் அமிதா சுக்லா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கொலஸ்ட்ரால், பிபி இருக்கா?... சமீபத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

Last Updated : Jun 1, 2023, 12:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.