ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் - பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கும் அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதியை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (ஜன. 03) வழங்கியது.
ஹரியானா மாநிலத்தில் கரோனா வைரஸ் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் ஒன்றான குருகிராமில் தடுப்பூசி ஒத்திகை இன்று (ஜன. 07) தொடங்கியுள்ளது. இதற்கிடையே, ஹரியானா மாநிலத்தின் நிதி மூலதனமாக குருகிராம் இருப்பதால் அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது.
குருகிராமில் கரோனா தடுப்பூசியின் ஒத்திகை இன்று ஆறு இடங்களில் தொடங்கியது, இது உலக சுகாதார அமைப்பு (WHO) அலுவலர்களின் மேற்பார்வையில் உள்ளது. மேலும், உலக சுகாதார அமைப்பின் இந்தியா தலைவர் குருகிராமிற்கு தடுப்பூசி ஒத்திகையைப் பார்வையிடவருகிறார்.
குருகிராமின் பங்கரோலா கிராமத்தில் நடைபெறவிருக்கும் தடுப்பூசி ஒத்திகையை உலக சுகாதார அமைப்பின் தலைவரும், மாவட்ட சுகாதார அலுவலர்களும் எடுத்துக் கொள்கிறார்கள். அங்கு சுமார் 150 சுகாதார ஊழியர்களுக்குத் தடுப்பூசி ஒத்திகையை நடைபெறவுள்ளது.
குருகிராமின் டைக்ரா முதலுதவி மையம் தவிர, மொத்தம் ஆறு இடங்கள் தடுப்பூசி ஒத்திகைக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளன, இதில் பசாய், வஜிராபாத், தௌலதாபாத், குருகிராமின் பங்கரோலா உள்பட ஆறு இடங்களில் நடைபெறவுள்ளது. இதில் சுமார் 150 பேருக்கு தடுப்பூசி ஒத்திகை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நாடு தழுவிய இரண்டாவது கரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை மறுநாள் (ஜன. 08) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஒத்திகை எதற்கு?
கரோனா தடுப்பூசிக்கு அரசு எவ்வாறு திட்டமிடுகிறது, மக்களுக்குத் தடுப்பூசி எவ்வாறு வழங்கப்படும், தடுப்பூசி எவ்வாறு மேற்கொள்ளப்படும், தடுப்பூசியின்போது என்ன பிரச்சினைகள் ஏற்படலாம் என்பது பற்றிய அனைத்து விஷயங்களையும் அறிந்துகொள்வதற்காக தடுப்பூசி ஒத்திகை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான தன்னார்வலர்களை சேர்க்கும் பணி நிறைவு - பாரத் பயோடெக்