ETV Bharat / bharat

World Environment Day 2023: மனித குலத்தை களையெடுக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்!

author img

By

Published : Jun 5, 2023, 11:18 AM IST

ஆண்டுக்கு 23 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் ஆறு, ஏரி, கடல் உள்ளிட்ட நீர் நிலைகளில் கொட்டப்படுவதாகவும், அதன் மதிப்பீடு பிரான்ஸ் ஈபிள் டவரை விட பெரியது என்றும் ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

Enivronment
Enivronment

ஐதராபாத் : இன்று உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. பிளாஸ்டி ஒழிப்பை முன்னிறுத்தும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பேரழிவுகளை தடுப்பது குறித்து ஐநா பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்ரெஸ் வலியுறுத்தி உள்ளார். உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலக சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு 1974ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கருத்து தெரிவித்து உள்ள ஐநா அமைப்பின் பொதுச் செய்லாளர் ஆண்டானியோ குட்ரெஸ், உலகளவில் உற்பத்தியாகும் 400 மில்லியன் டன் பிளாஸ்டிக்கில் மூன்றில் ஒரு பங்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுகிறதாக ஆய்வில் கூறப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், 2 ஆயிரம் குப்பை லாரிகள் நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டி சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதாக ஆண்டானியோ குட்ரெஸ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நீர் நிலைகளை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் : நாள்தோறும், 2 ஆயிரத்துக்கும் அதிகமான குப்பை லாரிகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை கடல், ஏரி, ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கொட்டி சுற்றுச் சூழல் மாசுவை ஏற்படுத்துகின்றன. நுண்ணுயிர் பிளாஸ்டிக்குகள் நாம் உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் மற்றும் சுவாசிக்கும் காற்றிலும் பரவிக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

பிளாஸ்டிக் புதை படிவ எரிபொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எவ்வளவு பிளாஸ்டிக்கை நாம் உற்பத்தி செய்கிறோம், அந்தளவுக்கு அதிக புதைபடிவ எரிபொருளை எரிக்கிறோம். இதுவே பருவநிலை மாற்றம் மற்றும் காலநிலை நெருக்கடிக்கான சூழலை ஏற்படுத்துகிறது.

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு வழி இருக்கா?

பிளாஸ்டிக் பயன்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த வாரம் 130க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய ஐந்து நாட்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, அதைத் தொடர்ந்து, சட்டப்பூர்வமாக பிணைக்கப்படும் ஒப்பந்தம் உட்பட பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த தீர்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

பிளாஸ்டிக் ஒழிப்பு பிராசாரத்தில் 130க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவு ஒரு நம்பிக்கைக்குரிய முதல் படியாகும். அதேநேரம் அனைத்து நாடுகளும் பிளாஸ்டிக் பயன்பாடு குறைப்பு விசயத்தில் ஓரணியில் திரள வேண்டும்.

ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) புதிய அறிக்கையின் படி, பிளாஸ்டிக்கை மறுபயன்பாடு, மறுசுழற்சி மற்றும் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கும் முயற்சியில் தற்போது முதலே ஈடுபட்டால் 2040ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் மாசுபாடு 80 சதவீதம் வரை குறையும் என ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளதாக ஆண்டனியோ குட்ரெஸ் தெரிவித்தார்.

அரசுகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர்கள், பொது மக்கள், பிளாஸ்டிக் மீதான நாட்டத்தை குறைத்து, பூஜ்ஜிய பிளாஸ்டிக் கழிவுகள் என்ற மைல்கல்லை உருவாக்க ஒரணியில் நின்றால் விரைவில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லா உலகம் உருவாகும் என ஆண்டானியோ குட்ரெஸ் தெரிவித்து உள்ளார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, பொது மக்கள் அனைவரும் இணைந்து, தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவோம் என்று அவர் கூறியுள்ளார்.

ஈபிள் டவரின் எடையை மிஞ்சும் ஆண்டு பிளாஸ்டிக் கழிவுகள் : பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு 19 முதல் 23 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம்) டன் பிளாஸ்டிக் கழிவுகள் ஏரி, ஆறு, கடல் உள்ளிட்ட நீர் நிலைகளில் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எடுத்துக்காட்டாக, நீர் நீலைகளில் கொட்டப்படும் கழிவுகள் பிரன்ஸ் ஈபிள் டவரின் 2 ஆயிரத்து 200 கிலோ எடைக்கு சமமானது என்ற அதிர்ச்சிகர தகவல் ஆய்வில் தெரியவந்து உள்ளது. மேலும் 400 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அதில பாதி ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் என்றும் கூறப்படுகிறது. மேலும் 10 சதவீத பிளாஸ்டிக் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாக ஐநா வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : Wrestlers meet Amit Shah : அமித்ஷாவுடன் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் சந்திப்பு... பிரிஜ் பூஷன் சிங் கைதா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.