ETV Bharat / bharat

'கை இல்லாமலும் சாதிக்கலாம்' விருதைத் தட்டிச்சென்ற மாற்றுத்திறனாளி பெண்!

கர்நாடகாவில் கைகள் இல்லாமல் பிறந்த பெண்ணின் சாதனைகளைக் கௌரவிக்கும் விதமாக, அவருக்குத் தேசிய பெண் சாதனையாளர்- 2021 விருது வழங்கப்பட்டுள்ளது.

Women
பெங்களூரு
author img

By

Published : Mar 8, 2021, 6:46 PM IST

பெங்களூரு: மார்ச் 8-ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவு முதலே சமூக வலைதளங்களில் மகளிர் தினம் வாழ்த்துகள் நிரம்பி வழிகின்றன. பல நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளுக்குச் சலுகைகள் வழங்கியுள்ளன. சாதித்த பெண்களுக்கு, விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சாதனை செய்திட மனதில் நம்பிக்கை இருந்தால் போதும் என்பதைக் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் நிரூபித்துள்ளார்.

தட்சிணா கன்னட மாவட்டத்தின் கர்தாடி கிராமத்தைச் சேர்ந்த சபிதா மோனிஷ், பிறக்கும் போதே இரண்டு கைகள் இல்லாமல் பிறந்தாலும், தன்னம்பிக்கையை இழக்கவில்லை. பெற்றோர் அரவனைப்போடு வளர்ந்த அவர், தேர்வுகளைக் கால்களை உபயோகித்து எழுதினார். தற்போது, அல்வாவின் கல்வி அறக்கட்டளையில் குழந்தைகள் நல அலுவலராக பணியாற்றி வருகிறார். மேலும், தேர்தலில் கால்கள் மூலம் வாக்களித்துள்ளார்.

விருதைத் தட்டிச்சென்ற மாற்றுத்திறனாளி பெண்

தேசிய பெண் சாதனையாளர் 2021 விருது

அவரின் மன நம்பிக்கையை மேலும் ஊக்குவிக்கும் விதமாக இந்திய தேசிய பத்திரிகைக் கவுன்சில், கர்நாடகாவின் செய்தித்தாள் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தில் தேசிய பெண் சாதனையாளர் 2021 விருது சபிதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது

இதுகுறித்து பேசிய சபிதா மோனிஷ், " நமது இயலாமையை மறந்து, தொடர்ந்து முயன்றால் நிச்சயம் சாதிக்க முடியும். எனக்கு கைகள் இல்லை, அதனால் எனது அன்றாட வேலைகளை கால்களால் செய்கிறேன். எல்லோரையும் போலவே படிப்பை நல்ல முறையில் படித்துமுடித்தேன். தற்போது, நல்ல இடத்தில் பணி செய்துகொண்டிருக்கிறேன். குடும்பத்தினர், ஆசிரியர்கள், நண்பர்கள் எனது முயற்சிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். சமூகத்தில் ஒவ்வொரு பெண்ணையும் அனைவரும் மதிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: லத்தியை சுழற்றி வித்தை காட்டும் 'மார்ஷியல் ஆர்ட்ஸ்' பாட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.