உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 26 வயதான ராதிகா என்ற பெண்ணுக்கும், ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் குப்தாவின் மகன் ஆகாஷ்குப்தாவுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது. செல்பி எடுப்பதில் மிகுந்த ஆர்வமிக்க ராதிகா, தனது மாமனார் வைத்திருந்த ஒற்றை குழல் தூப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார்.
அந்த துப்பாக்கியில் ஏற்கனவே குண்டுகள் நிரப்பப்பட்டிருந்ததால், ராதிகா தெரியாமல் டிரிக்கரை அழுத்தியதும் குண்டு வெடித்தது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் ராதிகா கிடந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
புதுசாக திருமணமான பெண், செல்பி எடுக்கும் ஆசையில் உயிரிழந்திருப்பது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அப்பெண் தவறுதலாக தூப்பாக்கியால் சுட்டு உயிரிழந்தாரா அல்லது வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏனென்றால், உயிரிழந்த பெண்ணின் தந்தை உள்ளூர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமையால் ஏற்பட்ட மரணம் என புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போனில் பேசியதற்காக பெண்களுக்கு அடி - குஜராத்தில் நடந்த கொடூரம்