விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள நபர் ஒருவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டில் குடியிருந்த நபரோ கடந்த ஓராண்டாக வாடகை கொடுக்காமலிருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வாடகைக்குக் குடியிருக்கும் நபரின் பொருட்களை வெளியே தூக்கி வீச முடிவு செய்துள்ளார்.
அதன்படி கதவை உடைத்து உள்ளே வீட்டின் உள்ளே சென்ற உரிமையாளர் அங்கிருந்த ட்ரம் ஒன்றைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். காரணம், அதில் ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. பின்னர் அச்சமடைந்த அந்த நபர் அருகிலிருந்த காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "விசாகப்பட்டினம் நகர் மதுரவாடாவில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர், தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். ஆனால் கடந்தாண்டு ஜூன் மாதம் அந்த வீட்டிலிருந்த வாடகைதாரர், தனது மனைவியின் கர்ப்பத்தைக் காட்டி பணம் செலுத்தாமல் வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் அவர் அந்த வீட்டுக்குத் திரும்பவில்லை. ஓராண்டுக்கும் மேலாகக் காத்திருந்தும் வாடகைதாரர் பணம் செலுத்தாததால், அந்த வீட்டிலிருந்த அகற்ற நினைத்துள்ளார். அப்போது அங்கிருந்த ட்ரம் ஒன்றில் ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் கிடந்துள்ளது. தற்போது அந்த உடல் பாகங்கள் யாருடையது? அந்த வீட்டிலிருந்தவர் யார்? தற்போது அவர் எங்கிருக்கிறார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து வீட்டின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார்" இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க: Parliament winter session: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!