போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் விமான நிலையத்தில் இருந்து இன்று, துபாய் செல்லும் விமான பயணிகளுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, 30 வயதுடைய பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், அந்தப் பெண்ணை, விமான நிலைய அலுவலர்கள் துபாய் செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து, இந்தூர் சுகாதாரத்துறை தலைமை அலுலவர் கூறுகையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் துபாயை சேர்ந்தவர். 12 நாள்களுக்கு முன்பு இந்தூருக்கு வந்து இன்று மீண்டும் துபாய்க்கு செல்ல இருந்தார்.
வெவ்வேறு நாடுகளில் நான்கு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தும் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு முன்பு செய்யப்பட்ட பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார். மேலும் டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிாரா, மத்தியப் பிரதேச மாநிலங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: COVID Spike: டெல்லியில் கோயில்கள் மூடல்