ETV Bharat / bharat

கங்கையில் தவறி விழுந்து 40 கி.மீ. அடித்துச்செல்லப்பட்டும் உயிர்தப்பிய மூதாட்டி..! - உத்தரப் பிரதேசம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கையில் 40 கி.மீ அடித்துச் செல்லப்பட்டும் ஓர் 75 வயது மூதாட்டி உயிர் தப்பிய சம்பவம் நடந்தேறியுள்ளது.

கங்கையில் தவறி விழுந்து 40 கி.மீ அடித்துச் செல்லப்பட்டும் உயிர்தப்பிய மூதாட்டி...!

author img

By

Published : Oct 11, 2022, 9:25 AM IST

கௌசாம்பி ( உத்தரப்பிரதேசம்): ஃபடேகர் மாவட்டத்தில் கடந்த ஞாயிறு(செப்.9) 75 வயதுடைய ஓர் மூதாட்டி கங்கை நதியில் தவறி விழுந்து 40 கி.மீ அடித்துச்செல்லப்பட்டும் உயிர் பிழைத்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின், ஷாம்பூர் கிராமத்தைச்சேர்ந்த இவரின் பெயர் சாந்தி தேவி. இவர், கடந்த ஞாயிறு(அக்.9) அன்று மலம் கழிப்பதற்காக கங்கைக்குச்சென்றபோது, அங்கு தவறி ஆற்றில் விழுந்துள்ளார்.

வெகுநேரமாகியும் சாந்தி தேவி வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்நிலையில், கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கதுவா கிராமத்திலுள்ள கங்கை நதிக்கரையில் சாந்தி தேவி கரை ஒதுங்கிக் கிடந்ததை அக்கிராம மக்கள் கண்டுள்ளனர். இதையடுத்து, இதுகுறித்து காவல் துறையிடம் புகார் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சாந்தி தேவி உயிருடன் இருப்பதைக் கண்டதும் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு நினைவு திரும்பியதும், தன் குடும்பத்தைப் பற்றி சாந்தி தேவி கூறியுள்ளார். இந்நிலையில், ஏறத்தாழ 40 கி.மீ., நதியில் அடித்துச் செல்லப்பட்டும் உயிர்தப்பிய மூதாட்டியை அப்பகுதி மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: 75 ஆண்டுகாலமாக பத்மநாபசாமி கோயிலில் இருந்த 'பாபியா' முதலை காலமானது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.