கோழிக்கோடு: கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் தாமரச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பௌசியா. இவர், அந்தப் பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தபோது, ரோஷன் என்பவரின் மூன்று நாய்கள் பௌசியாவை தாக்கின.
நாய்களின் தாக்குதலால் பௌசியா நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தார். பௌசியாவின் கதறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர், நாய்களை கட்டுப்படுத்தி பௌசியாவை மீட்டு கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
நாய்களின் அட்டூழியம்
நாய்கள் தாக்கும்போது, ரோஷன் அருகில் இருந்தும் பௌசியாவை மீட்க வரவில்லை என்றும் நாங்கள் வந்த பின்னரே ரோஷன் நாய்களிடம் இருந்து அப்பெண்ணை மீட்க வந்தார் என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், நாய்களை கட்டிவைக்காமல் அவிழ்த்துவிட்டதற்கு காவல்துறையினர் நாய்களின் உரிமையாளர் ரோஷனை கைதுசெய்தனர்.
சில நாள்களுக்கு முன்னர், ரோஷனின் நாய்கள் கடித்து பிரபாகரன் என்ற ஆதாரவற்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், அவரின் நாய்கள் பலரையும் கடித்துள்ளது, இருப்பினும் ரோஷன் அந்த நாய்களை கட்டிவைக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது, பௌசியா தாக்கப்பட்டதின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அமித் ஷா தலைமையில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் - பொன்முடி பங்கேற்பு