ETV Bharat / bharat

மறுமணத்திற்காக குழந்தைகளை விற்ற கொடூரத் தாய்.. பீகாரில் நடந்தது என்ன?

பீகாரில் மறுமணத்திற்காக குழந்தைகளை விற்ற பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மறுமணத்திற்காக குழந்தைகளை விற்ற தாய்
மறுமணத்திற்காக குழந்தைகளை விற்ற தாய்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 10:55 PM IST

முசாபர்பூர் (பீகார்): திருமணத்திற்காகப் பெற்ற மகளை விற்றுவிட்டு, மகனைத் தனியார்ப் பள்ளி விடுதியில் விட்டுச் சென்ற இரக்கமில்லாத தாய். கணவன் மற்றும் மனைவி தங்களது குழந்தைகளுடன் ராஞ்சியில் வசித்து வந்துள்ளனர். பின்னர் அவர்களின் வாழ்வாதாராம் கருதி, ராஞ்சியில் இருந்து பீகார் மாநிலம் முசாபர்பூருக்கு பிழைப்பிற்காகக் குடிபெயர்ந்துள்ளனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் இறந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபருடன் பழகி வந்துள்ளார்.

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் குழந்தைகளை ஏற்று கொள்ள மனமில்லாமல் அந்த நபர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் காரணத்தை அப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இதனால் இரக்கமில்லாத அந்தப் பெண், தன் மகளை 2.5 லட்சத்திற்கு வியாபாரியிடம் விற்றுவிட்டு, மகனைத் தனியார்ப் பள்ளி விடுதியில் சேர்த்துவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, விடுதியில் தங்கியிருந்த மாணவன் விடுதிக்கட்டணம் செலுத்ததனால், ஆசிரியர்கள் மாணவனிடம் விசாரித்துள்ளனர். பின்னர் மாணவன் நிகழ்ந்த சம்பவங்களை ஆசிரியரிடம் அடுக்கியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவரின் உறவினர்களான தாத்தா மற்றும் மாமாவிற்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். மாணவரின் உறவினர்கள் இது குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மற்றொரு பெண் குழந்தையை மீட்க வலியுறுத்தி, இரக்கமில்லாமல் குழந்தைகளை விற்ற தாயைக் கைது செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் தேடும் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட காவல் துறையினர், ரூபாய் 2.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட மாணவியை அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த தொழிலதிபரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், தலைமறைவான அந்த மாணவியின் தாய் மற்றும் அந்த நபரை அதிரடியாகக் கைது செய்தனர்.

இது குறித்து முசாபர்பூர் நகரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) ராகேஷ் குமார் கூறுகையில், "மாணவி விற்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மாணவி நலனுடன் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தொழிலதிபரிடம் விற்ற தாய் மற்றும் அவர் திருமணம் செய்யவிருந்த அந்த நபர், மாணவியை வாங்கிய தொழிலதிபர் என இதுவரை இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா என்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோயில்களில் சிறுவர்களும் அர்ச்சகர்; தகுதி குறித்து ஆய்வு செய்ய குழு - நீதிமன்றம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.