டெல்லி: புகழ்பெற்ற லார்ட் ஆஃப் ட்ரிங்க்ஸ் இரவு விடுதியில் ராகுலுடன் சேர்ந்து மது அருந்திய பெண் நேபாளத்துக்கான ஒரு நாட்டின் தூதர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்த திருமண பார்ட்டி ஒன்றில் ராகுல் காந்தியின் அருகே உள்ள பெண் யாரென்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த வீடியோவை பாஜகவினர் சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். அதில் வீடியோவில், ராகுல் காந்தியின் அருகில் நிற்பவர்கள் பாட்டிலில் ஏதோ பருகும் காட்சிகள் உள்ளன.
இதை பாஜகவினர் சர்ச்சையாக்கிய சூழலில், அங்கு ராகுலுடன் சேர்ந்து மது அருந்திய பெண் நேபாளத்துக்கான சீன தூதர் ஹூ யான்கி என்று தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பயங்கரவாத இயக்கமா?;சென்னையில் நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை'