கௌசாம்பி (உத்தர பிரதேசம்): சவுதி அரேபியாவில் கடந்த ஆக.18ஆம் தேதி உயிரிழந்த தனது கணவரின் உடலை மீட்டுத் தருமாறு அவரது மனைவி கௌசாம்பி மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு எழுதிய கடிதம் மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கௌசாம்பி அருகே மஞ்சனூர் தாலுகா அமுரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ராம்மிலன் என்பவர் திருமணத்திற்குப் பிறகு தனது குடும்பத்திற்கு வாழ்வாதாரம் ஈட்டுவதற்காக சவுதி அரேபியா சென்றார். இதற்கிடையே, ஆக.18ஆம் தேதி காலை ராம்மிலன், நெஞ்சு வலி இருப்பதாக குடும்பத்தினரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்து விட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார்.
தொடர்ந்து அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைக்கவே, அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ராம்மிலனின் நண்பர் அந்நாட்டு போலீசார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இதுநாள் வரையில், உயிரிழந்த ராம்மிலனின் சடலம் குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.
இந்நிலையில், தனது கணவரின் சடலத்தை மீட்கக் கொரி கௌசாம்பி மாவட்ட மாஜிஸ்திரேட் சுஜித் குமாருக்கு கடிதம் மூலம் இன்று (ஆக.25) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஃபைசர் கரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கு 73 விழுக்காடு அளவில் அரணாய் இருந்தது... ஃபைசர் நிறுவனம்