முர்ஷிதாபாத்: தற்காலத்தில் காதலுக்காக கடல் கடந்து செல்வதென்பது சர்வசாதரண சம்பவங்களாக மாறிவிட்டது. வாரணம் ஆயிரம் படத்தில் வரும் தந்தை சூர்யா போல், “இங்க இருக்குடா அமெரிக்கா...!” எனக் கூறி தங்களின் காதல் இணையரைத் தேடிச் சென்றுவிடுகின்றனர் இளைஞர்கள்.
அப்படியொரு சம்பவம் முர்சிதாபாத் மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஃபர்ஷன என்கிற பெண்மணி, முர்சிதாபாத்தைச் சேர்ந்த முசாஃபிர் என்பவர் மீது காதல் வயப்பட்டுள்ளார். தன் காதலுக்கு தனது பெற்றோர் ஒப்புக்கொள்ளாததால் அமெரிக்காவையே விட்டு தன் இணையருக்காக இந்தியா வந்துள்ளார் ஃபர்ஷானா.
ஆரம்பத்தில், ஃபர்ஷானாவை ஏற்க மறுத்த முசஃபிரின் குடும்பத்தினர் பின்பு ஏற்றுக் கொண்டனர். சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவிடுபவரான முசஃபிருக்கும் ஃபர்ஷானாப்விற்குமிடையே சமூக வலைதளத்தின் மூலமாக நட்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முசஃபிர் கூறுகையில், “ நாங்கள் சமூக வலைதளத்தில் முதலில் நண்பர்கள் ஆனோம். அதன்பின்பு நாங்கள் பரஸ்பரமாகக் காதல் வயப்பட்டோம். அவள் எனக்காக தன் குடும்பத்தையே விட்டு இங்கு வந்தாள், நான் அவளின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்” என்றார்.
ஃபர்ஷானா பேசுகையில், “நான் முசஃபிரைக் காதலித்தேன். அவரைத் திருமணம் செய்துகொள்ளவே இந்தியா வந்தேன். வருங்காலத்தில் அவரை அமெரிக்கா அழைத்துச் செல்வேன். அங்கு நாங்கள் இருவரும் எங்களது இல்லர வாழ்க்கையைத் தொடருவோம்” என்றார்.
மேலும் பேசிய முசஃபிரின் தந்தை அப்துல் ஹன்னான் கூறுகையில், “என் மகனிற்காக பல தொலைவிலிருந்து ஃபர்ஷானா வந்துள்ளார். அவளை நிச்சயம் நாங்கள் கைவிட மாட்டோம்” என்றார். இந்தச் சம்பவம் குறித்து கேள்விபட்டதும் அக்கம் பக்கத்தினர் முசஃபிரின் இல்லத்தைச் சூழ்ந்தனர்.
இதையும் படிங்க: குதிரைகளுக்கான மாபெரும் கண்காட்சி; பல்வேறு ரகக் குதிரைகள் பங்கேற்பு