மேற்கு வங்கம்: தெற்கு பர்கானாஸின் குல்தாலி பகுதியில் தனது நான்கு வயது மகனைக் கொலை செய்த பெண்ணை அவரது காதலன் உடன் போலீசார் கைது செய்தனர். மஃபுசா பியாடா என்ற பெண்ணின் கணவர் தௌப் அலி கொல்கத்தாவில் கூலி வேலை செய்து வருகிறார். இதில் மஃபுசாவுக்கும் அபுல் ஹொசைன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. தௌப் அலிக்கு, தனது மனைவியின் திருமணத்துக்குப் புறம்பான உறவு குறித்து எதுவும் தெரியாது.
இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது. கடந்த செவ்வாய்கிழமை தௌப் வேலைக்குச் சென்ற பின் அபுல் ஹொசைன் வீட்டிற்கு வந்துள்ளார். மஃபுசா, அபுல் ஹொசைனை திருமணம் செய்து கொண்டு அவருடன் வசிக்க விரும்பியுள்ளார். ஆனால் அவருக்கு திருமணத்திற்கு பிறகு மகனை என்ன செய்வது என்று புரியவில்லை.
இதுகுறித்து அபுல் ஹொசைன் உடன் நீண்ட நேரம் கலந்துரையாடிய பிறகு, மஃபுசா தனது கணவருடனான தனது உறவை முடித்துக்கொண்டு அபுல் உடன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார். அப்போது இருவரும் குழந்தையை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதையறிந்த தௌப் அலி போலீசாரிடம் மஃபுசா, அபுல் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட மஃபுசா கைது செய்யப்பட்டு பருய்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மஃபுசாவை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதித்தது. தலைமறைவாக இருந்த அபுல் ஹொசைனை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை போலீஸ் காவலில் வைக்க அனுமதி கோரியிருப்பதாகவும், விசாரணையின் போது இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பெண்களுக்கு சிகிச்சையளிப்பதில் வல்லவரென பெயர்பெற்ற போலி மருத்துவர் கைது