அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா பகுதியை சேர்ந்த தம்பதி கீட்டிங் ஷெர்ரி-யிரான் ஷெர்ரி. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறார். மேலும் யிரான் ஷெர்ரி கர்ப்பமாகவும் இருந்தார்.
இந்த தம்பதி டெஸ்லா காரில் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள நிலையில், யிரானுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலால் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை.
இதையடுத்து, கீட்டிங் ஷெர்ரி உடனே காரை ஆட்டோ பைலட் மோடுக்கு மாற்றியுள்ளார். மேலும், மருத்துவமனை செல்லும் முன்பே சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததுள்ளது. இதனால், இந்தக் குழந்தை, உலகின் முதல் டெஸ்லா குழந்தை என அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க : ஆத்தா மலை ஏறிட்டா டா... தடுப்பூசி போட்ட பாட்டி சாமி ஆடிய காணொலி...