ஹைதராபாத்: தலைநகர் டெல்லியில், தற்போது பெய்து வரும் தொடர்மழையால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. ரயில் நிலையமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கிழக்கு டெல்லி பகுதியின் பிரீத் விஹாரை சேர்ந்த சாக்ஷி அகுஜா, சனிக்கிழமை ( ஜூன் 24ஆம் தேதி) அதிகாலை 05.30 மணிக்கு, தனது 3 குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்தார். நடைபாதையில், மழைநீர் தேங்கி இருந்த நிலையில், அந்த நீரைத் தாண்டி செல்லும் பொருட்டு, அருகிலிருந்த மின்கம்பத்தைத் தொட்டு உள்ளார்.
திடீரென்று அதிலிருந்து மின்சாரம் பாய்ந்த நிலையில், சம்பவ இடத்திலேயே, சரிந்து விழுந்தார். இதனை அடுத்து பதட்டம் அடைந்த, அவரது குடும்பத்தினர், உடனடியாக, காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மயங்கிக் கிடந்த சாக்ஷி அகுஜாவை, அவரது சகோதரி உடன் இணைந்து, லேடி ஹோர்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம், டெல்லி ரயில் நிலையத்தின், வெளியே வரும் முதலாவது வாயிற் பகுதியில் நிகழ்ந்து உள்ளதாக, போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே, தனது சகோதரி உயிரிழந்து உள்ளதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி மாதவி சோப்ரா போலீசில் புகார் அளித்து உள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். சாக்ஷி அகுஜாவின் தந்தை லோகேஷ் குமார் சோப்ரா, தனது மகளின் மரணத்திற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டி உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, "நாங்கள் சண்டிகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம், என் மகள் சாக்ஷி அகுஜா மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகத் தகவல் கிடைத்ததும் நான் வாகனம் நிறுத்துமிடத்திலிருந்த தாங்கள், சம்பவ இடத்திற்கு வந்ததாக” அவர் குறிப்பிட்டு உள்ளார்.அங்குப் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, மின்கம்பத்தில் மின்சார கம்பிகள் திறந்த நிலையில் இருப்பது தெரியவந்து உள்ளது. . இந்த சம்பவம் தொடர்பாக, ரயில்வே போலீசார் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 23 வயதே ஆன, அகிலா அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, தண்ணீர் தேங்கிய சாலையைக் கடக்கும்போது ஸ்கூட்டி வாகனத்தில் இருந்து சறுக்கி சாலையில் விழுந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, மின்கம்பத்தில் மோதியதில், அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், டெல்லி ரயில் நிலையத்தில், இந்த துயர சம்பவம் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரட்டையர்களை மணந்த இரட்டையர்கள் - ம.பி.யில் தான் இந்த ருசிகர சம்பவம்!