ETV Bharat / bharat

பெங்களூருவில் கருக்கலைப்பு மாத்திரை விழுங்கிய பெண் உயிரிழப்பு - abortion pill side effects

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கருக்கலைப்பு மாத்திரையை விழுங்கிய பெண் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

பெங்களூருவில் கருக்கலைப்பு மாத்திரை விழுங்கிய பெண் உயிரிழப்பு

author img

By

Published : Dec 14, 2022, 6:04 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ப்ரீத்தி குஷ்வா கருக்கலைப்பு மாத்திரையை விழுங்கிப்பின் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று (டிசம்பர் 13) உயிரிழந்தார். இதுகுறித்து பெங்களூரு போலீசார் கூறுகையில், பெங்களூருவை சேர்ந்தவர் ப்ரீத்தி குஷ்வா(33). இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 11 மாத குழந்தை உள்ளது. இதனிடையே டிசம்பர் 10ஆம் தேதி மருத்துவப் பரிசோதனையின் போது ப்ரீத்தி குஷ்வா கருத்தரித்திருப்பது தெரியவந்தது.

இந்த கருவை கலைக்க ப்ரீத்தி குஷ்வா முடிவு செய்தார். இதனை கணவரிடம் தெரிவித்துள்ளார். அவர் கலைக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், ப்ரீத்தி கருகலைப்பு மாத்திரையை வாங்கி விழுங்கியுள்ளார். இதனால் அவருக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனையறிந்த கணவர் மருத்துவமனைக்கு செல்லாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், ப்ரீத்தி இது வழக்கமானதுதான் என்று கூறி மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலை மேலும் மோசமானது. நேற்றிரவு (டிசம்பர் 13) திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்ட அவரது கணவர் ப்ரீத்தியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், வரும் வழியிலேயே ப்ரீத்தி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், அவரது உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளோம். இதன் முடிவிலேயே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 13 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு பிறந்த குழந்தை - ஏற்க மறுத்த சிறுமியின் தந்தை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.