பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ராகவேந்திரா விரிவாக்கம் பகுதியை சேர்ந்த காவ்யாஸ்ரீ (21) தொடர் முடி உதிர்வு காரணமாக பல்வேறு சிகிச்சைகளை எடுத்துவந்தார். இருப்பினும் தொடர்ந்து முடி கொட்டி வந்தது. ஒரு கட்டத்தில் வழுக்கை ஏற்பட்டுள்ளது.
இதனால் காவ்யாஸ்ரீ மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று (ஜூலை 2) வீட்டில் தூக்கிட்டு தனியாக இருந்தபோது தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நசராபாத் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனடிப்படையில் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு மைசூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலையை கைவிடுக: சொந்த காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சினேகா உதவி எண்களை அழையுங்கள். சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் - 104
இதையும் படிங்க: திருமண விழாவில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு