கொல்காத்தா: மேற்கு வங்க மாநிலம் ஹவுராவை சேர்ந்த தேப்ராஜ் கோஷ்-பல்லவி தம்பதிக்கும், தேப்ராஜின் தாயார் மாதாபி மற்றும் அவரது சகோதரர் தேபாஷிஷ் ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு இருந்துவந்தது. இந்த நிலையில், நேற்று (ஆக 10) மாதாபி மற்றும் தேபாஷிஷ் அவரது மனைவி ரேகா, 13 வயது மகள் திரியாஷா நான்கு பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்த போலீசார் விசாரணையில் பல்லவியே நான்கு பேரையும் தனது கணவர் தேப்ராஜ் கோஷ் உதவியுடன் கொலை செய்தது தெரியவந்தது. இதனடிப்படையில் போலீசார் பல்லவியை கைது செய்தனர். தேப்ராஜ் கோஷ் தலைமறைவானார். இதுகுறித்து போலீசார் தரப்பில், நேற்றிரவு 11 மணியளவில் நான்கு பேரும் அரிவாளால் வெட்டுக்கொலை செய்யப்பட்டனர். காலையில் அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் சம்பவயிடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டோம். பல்லவியிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. தேப்ராஜை தேட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராஜஸ்தான் சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு... மீட்க சென்ற சகோதரி கடத்தல்...