மகாராஷ்டிராவில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிசெய்ய பல இடங்களில் வாகன சோதனை நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையில் அண்மையில் முகக்கவசம் அணியாத பெண் ஒருவருக்கு அபராதம் விதித்த மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் மார்ஷல் தாக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
கண்டிவலி வெஸ்ட் மகாவிர் நகர் பகுதியில் உள்ள சிக்னலில் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் மார்ஷவ் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆட்டோ ரிக்ஷாவில் வந்த பெண்மணி ஒருவர் முகக்கவசம் அணியாததால் அவருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தார்.
இதைத் தொடர்ந்து அந்தப் பெண் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிப்போகவே அவர் அலுவலரை தாக்க தொடங்கியுள்ளார். இந்த வீடியோ வைரலாகவே காவல் துறையினர் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: அச்சகத் தொழிலாளி குத்திக்கொலை: சிசிடிவி கொண்டு விசாரணை!