உத்தரபிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டம், குவார்சி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் ஆய்வாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குல்தீப் சிங் கூறுகையில், 'பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் குவார்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
அதில் ஒரு குற்றப்பிரிவு ஆய்வாளர் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார், மேலும் விசாரணை நடந்து வருகிறது' என்றார்.