டெல்லி: நீட் (முதுகலை) மற்றும் இளங்கலை படிப்பில் மாணவர் சேர்க்கையில் 27 சதவீத இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு ஆகியவற்றை அனுமதித்து உச்ச நீதிமன்ற நீதிபதி டிஒய் சந்திரசூட் இன்று (ஜன.7) உத்தரவிட்டார். எனினும் இந்த வழக்கின் இறுதி விசாரணை மார்ச் மாதம் நடைபெறுகிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டிஒய் சந்திரசூட், “நீட் (முதுகலை) மற்றும் இளங்கலை படிப்பில் ஓபிசி 27 சதவீத இடஒதுக்கீட்டின் அரசியலமைப்பு செல்லுபடியை நாங்கள் உறுதி செய்துள்ளோம். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான (EWS) 10 சதவீத இடஒதுக்கீடு இந்தாண்டு அனுமதிக்கப்படும்.
எனினும் வருங்காலங்களில் அனுமதிப்பது குறித்து மார்ச் மாதம் இறுதி தீர்ப்பின்போது முடிவு எடுக்கப்படும். மேலும், பாண்டே கமிட்டி அறிக்கை தாக்கப்பட்ட பாடத்தின் இறுதி செல்லுபடியாகும். பாண்டே குழு அறிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்”என்றார்.
நீட் முதுகலை, இளங்கலை (NEET PG & UG)க்கான கவுன்சிலிங் அலுவலக குறிப்பேடுக்கு கொடுக்கப்பட்ட அறிவிப்புக்கு இணங்க நடந்தது. முன்னதாக நீட் தொடர்பான ரிட் மனுக்கள் ஜன.6ஆம் தேதி நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டன.
அப்போது மத்திய அரசின் வழக்குரைஞர் துஷார் மேத்தா, மருத்துவர் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை தொடங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த ரிட் மனுக்கள் மீதான உத்தரவை 7ஆம் தேதி பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.
அதன்படி இன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை நடத்த அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், அரசியல் சாசனத்தின்படி இது அனுமதிக்கத்தக்கது தான் என நீதிபதிகள் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சோனியா காந்தி தலைமையில் கூட்டம்!