ETV Bharat / bharat

டெல்லியில் தொடர்ந்து மோசமாகும் காற்றின் தரம்! - தேசிய தலைநகர்

தேசிய தலைநகரில் காற்றில் மாசுபாடு தொடர்ந்து அதிகரிப்பதால், காற்றின் தரம் தொடர்ந்து மோசமாகிவருவது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

with-low-visibility-and-thick-haze-delhis-air-quality-remains-very-poor

author img

By

Published : Nov 21, 2020, 3:53 PM IST

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதால், அதிகாலை நேரங்களில் குறைந்த தெரிவுநிலையும், மூடுபனியும் வழக்கமாகிவிட்டது.

காற்றின் தரம் மற்றும் வானிலை ஆய்வு மையம் சார்பாக செய்யப்பட்ட ஆராய்ச்சியின்படி டெல்லியில் காற்றின் தரம் 313ஆக உள்ளது. இதேபோல் டெல்லியின் ஏனைய முக்கியப் பகுதிகளான ஆனந்த் விஹார் 256, ஆர்கே புரம் 290உம் பட்பர்கஞ் 279 என இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் தெரிவித்துள்ளது.

அதில் துவார்கா மண்டலம் 8 மற்றும் ஜஹான்கிர்புரி பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்குப்படி காற்றின் தரம் 51-100 வரையில் இருந்தால் திருப்திகரமானது எனவும், 101-200 வரை இருந்தால் மோதுமானது எனவும், 201-300 என்று இருந்தால் மோசம் எனவும், 301-400 என இருந்தால் மிகவும் மோசம் எனவும், 401-500 என இருந்தால் பெரும் பாதிப்பு இருக்கும்.

இதனால் டெல்லி அரசு சார்பாக திங்கட்கிழமை இரண்டாம் கட்ட சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: 2024இல் இந்தியர்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.