டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 29 வரை, 17 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. குளிர்கால தொடர்க்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில், "குளிர்கால கூட்டுத்தொடர் ஆக்கப்பூர்வமாகவும், சுமுகமாகவும் நடைபெற வேண்டும். இதற்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அனைத்து கட்சிகளும் விவாதங்களுக்கு மதிப்புக் கூட்டும் என்று நம்புகிறேன். இளம் எம்.பிக்கள் விவாதிக்க வாய்ப்பளிக்க வேண்டும். இது அவர்களின் எதிர்காலத்திற்காகவும், அடுத்த தலைமுறையை ஜனநாயகத்திற்கு தயார்ப்படுத்துவதற்கும் உதவும்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டை, இந்தியா தலைமை ஏற்று நடத்துவது, வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல, நாட்டின் திறன்களை உலகின் முன் பறைசாற்றும் வாய்ப்பாகும். சமீபத்தில் ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பல்வேறுக் கட்சிகளின் தலைவர்களுடன் சுமுகமாக நடைபெற்றது.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்கிறது. தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் நாட்டை வளர்ச்சியின் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதற்கும், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான புதிய வாய்ப்புகளை மனதில் கொண்டும் முக்கியமான முடிவுகள் எடுக்கவா இந்த கூட்டத்தொடரில் முயற்சி மேற்கொள்ளப்படும்" என கூறினார்.
இதையும் படிங்க: ரெப்போ வட்டி 0.35 சதவீதம் உயர்வு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு