பெங்களூரு: கர்நாடக நீர்வள அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் அவர் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது கொலை மிரட்டல் விடுத்துவருகிறார் என்று பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார். இந்தப் புகாரை திட்டவட்டமாக அமைச்சர் மறுத்தார். இதுதொடர்பாக வெளியான வீடியோவும் போலியானது எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் தன் மீதான குற்றஞ்சாட்டுகள் நிரூபிக்கப்படும் தருணத்தில் தான் பதவியை மட்டுமல்ல அரசியலை விட்டே விலகுவேன் என்றும் கூறினார்.
இந்நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் அமைச்சர் ரமேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில் அமைச்சர் ரமேஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர் முதலமைச்சரிடம் ஒப்படைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ரமேஷ் ஜர்கிஹோலியின் ராஜினாமாவை இரண்டே மணி நேரத்தில் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா ஏற்றுகொண்டார்.
இதையும் படிங்க : பாலியல் வழக்கில் சிக்கிய அமைச்சர்: புகார் அளித்த ஆர்வலர்!