தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பாவர் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், இதுபோன்ற செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. 300க்கும் மேற்பட்ட எம்.பிக்களை வைத்திருக்கும் கட்சியை எதிர்த்து போட்டியிட்டால் முடிவு என்னவாக இருக்கும் என எனக்கு நன்றாகத் தெரியும். எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மறுத்துள்ளார்.
அரசியல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் அன்மையில் சரத் பவார், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பின் விளைவாகவே ஊடகங்களில் சரத் பவார் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்ற தகவல் பரவியது.
பிரசாந்த் கிஷோர் உடனான சந்திப்பு தனிப்பட்ட விவகாரம் என்றும் அதற்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சரத் பவார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கல்விக் கண் திறந்த காமராஜர்.. வாழ்வும்- வரலாறும்!