ETV Bharat / bharat

கணவருக்கே ஆபாச படம் அனுப்பி மிரட்டல் - கள்ளக்காதலனுடன் மனைவி நாடகம் என புகார் - கணவனை மிரட்டிப் பணம் பறித்த மனைவி

மகாராஷ்ட்ராவில் தன் காதலனின் உதவியுடன் மனைவியே கணவனிடம் 4.5 லட்சம் ரூபாயை மிரட்டிப் பறித்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

காதலனின் உதவியுடன் தனது ஆபாச படத்தை கணவருக்கே அனுப்பி பணம் பறித்த மனைவி!

author img

By

Published : Dec 15, 2022, 7:50 PM IST

நாசிக்(மகாராஷ்ட்ரா): தன்னுடைய காதலனின் உதவியுடன் ஓர் மனைவியே தன் கணவனை மிரட்டி 4.5 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ள சம்பவம் நடந்தேறியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட கணவர் காவல்துறையிடம் அளித்த புகாரில், தனக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து தன் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொலி அனுப்பப்பட்டதாகவும், அதை வெளியிடாமல் இருக்க கேட்கும் பணத்தைக் கொடுக்க வேண்டும் என தனக்கு மிரட்டல் விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதனால் சமூகத்தில் தனக்கு உள்ள நற்பெயருக்கு கேடு வந்துவிடுமென்கிற அச்சத்தில் அந்த மிரட்டல் விடுத்த நபருக்கு 4.5 லட்ச ரூபாய் பணம் கொடுத்ததாகவும், ஆனால் இவை தன்னிடம் பணம் பறிக்க தன் மனைவி அவரது காதலனுடன் சேர்ந்து நிகழ்த்திய நாடகமென்பது பின்பு தான் தெரிய வந்தது எனக் குறிப்பிட்ட அவர் இதுகுறித்து காவல்துறையிடம் தன் மனைவி மற்றும் அவரது காதலர் மீது புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: காவலர் போல் பேசி பணம் பறித்த இளைஞர்கள் - அதிரடியாக கைது செய்த கரூர் போலீஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.