ஆந்திரா : நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஆத்மகுரு என்ற பகுதியில் வசித்து வருபவர், பெஞ்சலையா.
இவருக்கு கொண்டம்மா என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் திருமணமாகி 12 வருடங்கள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பெஞ்சலைய்யா ஹெச்டிஎப்சி ஏடிஎம் மையத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். கொண்டம்மா ’மெப்மா’ என்ற திட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் பெஞ்சலைய்யாவுக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் கொண்டம்மா மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கொண்டம்மா மன விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள சென்றுள்ளார்.
தூக்கிட்டு தற்கொலை
ஆனால்,பெஞ்சலைய்யா மனைவியை தடுக்காமல் மாறாக அதனை வீடியோ எடுத்துள்ளார்.
அதில்,கொண்டம்மா மின்விசிறியில் புடவைவையைக் கட்டி தற்கொலை செய்து கொள்கிறார். தூக்கில் தொங்கியபடி துடிதுடித்து இறக்கிறார். இதனை முழுமையாக வீடியோ எடுத்த அவரது கணவர் இந்த வீடியோவை அவரது உறவினர்கள் அனைவருக்கும் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து, இந்தத் தகவலை அறிந்த காவல் துறையினர் கொண்டம்மாவின் உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், மனைவி துடிதுடித்து உயிரிழந்ததை வீடியோவாக எடுத்த பெஞ்சலைய்யாவை காவல் துறையினர் கைது செய்தனர்.
கொண்டம்மாவுடன் பணிபுரிந்த மெப்மா ஊழியர்கள் கொடூரன் பெஞ்சலைய்யா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : நீட் தேர்வு தோல்வி பயம் - கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான மாணவர் மீட்பு