ETV Bharat / bharat

’டெல்டா பிளஸ் வைரஸைத் தடுக்க ஏன் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளவில்லை...’ - ராகுல் கேள்வி

உருமாறிய டெல்டா பிளஸ் கரோனா வைரஸில் பாதிப்புகள் குறித்து கண்டறியும் வகையில் ஏன் இன்னும் பெரிய அளவிலான கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல்
ராகுல்
author img

By

Published : Jun 25, 2021, 12:29 PM IST

உருமாறிய டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் நாடு முழுவதும் மூன்றாம் அலையை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ள நிலையிலும், டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டோர் குறித்து கண்டறியும் வகையில் ஏன் இன்னும் பெரிய அளவிலான கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

”இந்தக் கேள்வி மோடி அரசுக்கானது. டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து பெரிய அளவில் பரிசோதனைகள் உள்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏன் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை? டெல்டா பிள்ஸ் வைரஸ் மீதான தற்போது புழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகளின் செயல்பாடு எப்படி இருக்கும்? மூன்றாம் அலையில் இந்த வைரஸ் தாக்குதலைத் தடுக்க என்ன திட்டத்தை வைத்துள்ளீர்கள்?” என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக ஏப்ரல், மே மாதங்களில் பல உயிர்களையும் பலிகொண்டு கட்டுக்கடங்காமல் பரவிய கரோனா தற்போது கட்டுக்குள் வந்து, பாதிப்பு எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த மாதங்களில் நான்கு லட்சத்துக்கும் மேலான கரோனா பாதிப்புகள் நாடு முழுவதும் பதிவாகி வந்த நிலையில், தற்போது 50 ஆயிரத்துக்கும் கீழ் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜூலை 7 முதல் 11 நாள்கள் நாடு தழுவிய போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.