ETV Bharat / bharat

காமெடியன் To  முதலமைச்சர் - பகவந்த் சிங் மாண் பஞ்சாப் முதலமைச்சர் ஆன கதை! - மேடையில் தள்ளாடிய பகவன் சிங்

பஞ்சாப்பின் புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ள பகவந்த் சிங் மாண் கடந்து வந்த பாதையை சிறு தொகுப்பாக காணலாம்.

மேடையில் தள்ளாடிய பகவன் சிங்
மேடையில் தள்ளாடிய பகவன் சிங்
author img

By

Published : Mar 10, 2022, 7:14 PM IST

Updated : Mar 10, 2022, 9:15 PM IST

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி சார்பாக முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவந்த் சிங் மாண் அம்மாநில முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். நகைச்சுவை நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பகவந்த் சிங் மாண், அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பிறகு அக்கட்சியின் இரண்டாவது முக்கிய நபராக மாறவுள்ளார்.

பகவந்த் சிங் மாணின் அரசியல் தொடக்கம்

பஞ்சாப் முதலமைச்சராக பகவந்த் சிங் மாண் அறிவிக்கப்பட்டபோதே ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதாகப் பார்க்கப்பட்டது. அது எப்படி என்று நீங்கள் கேட்டால், தன்னுடைய நடிப்பினால் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர், பகவந்த் சிங், 2014 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாபில் 4 இடங்களை வென்றதற்கு முக்கியக் காரணம், இவர் தான். பஞ்சாபில் ஜாட் சிங் குடும்பத்தில் வசதியான பின்னணியோடு பிறந்த பகவந்த் சிங் மாணுக்கு லட்சக்கணக்கில் சொத்துக்கள் இருக்கின்றன.

யார் இந்த பக்வந்த மாண்
யார் இந்த பக்வந்த மாண்?

தென்னிந்திய அரசியலை கரைத்துக் குடித்தவர்

இவர் நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாமல், பல மேடைகளில் ஸ்டாண்ட்அப் காமெடிகளை செய்து அசத்துவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இவருக்கு அரசியல் ஆர்வம் எங்கிருந்து தோன்றியது என்று பார்த்தால், அதற்கு மூலகாரணமாக இருந்தவர், அவரது தந்தையார். இதனால் பகவந்த் சிங் சிறு வயதிலிருந்தே அரசியலை ஆராயத் தொடங்கினார். வட இந்திய அரசியலை மட்டும் பார்க்காமல் தென்னிந்திய அரசியலையும் கரைத்து குடித்தவர் பகவந்த் சிங். இவருக்கு 12 வயது இருக்கும்போதே திமுகவைப் பற்றி படித்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார், பகவந்த் சிங்.

குடிபோதைக்கு அடிமை

என்னதான் நகைச்சுவை நடிகராகவும், அரசியலைப் பற்றி கரைத்து குடித்துவிட்டார் என்று சொன்னாலும், அதைவிட அதிகமாக அவர் குடித்தது மதுபானத்தைத் தான்.

ஆம். அவர் குடிபோதைக்கு மிகவும் அடிமையாக இருந்தார். பல முறை பொது மேடைகளில் போதையோடு பேசி பல விமர்சனங்களுக்கு ஆளானார். இதனையடுத்து 2019ஆம் ஆண்டில் அரசியல் கூட்டம் ஒன்றில் மது அருந்திவிட்டு உளறியபடி பேசினார். அப்பொழுது அந்த காணொலி சமூக வலைத்தளங்களில் பரவி, பெரிய அளவில் சர்ச்சையானது.

நம்பிக்கை இழந்த கெஜ்ரிவால்

யார் இந்த பக்வந்த மாண்
யார் இந்த பக்வந்த மாண்?

இவர் மீது பெரிய நம்பிக்கை வைத்து இருந்த கெஜ்ரிவால் இவரின் குடிப்பழக்கத்தைப் பார்த்து நம்பிக்கை இழந்தார். அவரிடம் பலமுறை குடிப்பழக்கத்தைவிட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பின் ஒரு மேடை கூட்டத்தில் தனது தாய் மீது ஆணையாக குடிப்பதை நிறுத்துவதாகக் கூறினார். சொன்னது போலவே குடிப்பதையும் நிறுத்திவிட்டார் என கெஜ்ரிவாலே பரப்புரை ஒன்றில் கூறினார்.

காங்கிரஸ் என்றாலே ஆகாது

இவ்வாறு குடிப்பழக்க விமர்சனங்களைக் கடந்து தற்போது பஞ்சாபின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார், பகவந்த் சிங் மாண். சிறு வயதிலிருந்தே காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனம் கொண்டவர்.

இவர் ஆம் ஆத்மியில் சேர்ந்ததற்கு முக்கியக் காரணமே, அந்த அளவிற்கு இவருக்கு காங்கிரஸ் என்றாலே ஆகாது.

இவரது மஞ்சள் நிற டர்பனுக்குக் காரணம், பகத் சிங் மீதான அன்பு தான். அதே அளவிற்கு காங்கிரஸை எதிர்த்தவர். இப்பொழுது அதே காங்கிரஸை தோற்கடித்து முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

இதையும் படிங்க: உ.பியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் யோகி ஆதித்யநாத்...

Last Updated : Mar 10, 2022, 9:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.