ஜம்மு காஷ்மீரில் 2019ஆம் ஆண்டில் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இந்த மாற்றத்திற்குப்பின் முதல்முறையாக ஜம்மு காஷ்மீரின் மூத்த அரசியல் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று (ஜூன்.24) சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் ஜம்மு காஷ்மீர் தொகுதியை மறுவரையறை செய்து, தேர்தல் நடத்துவது பற்றி அரசியல் தலைவர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தேர்தலுக்குப் பின் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க உறுதியளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். அதில், "காங்கிரஸும், பிற ஜம்மு காஷ்மீர் தலைவர்களும் முதலில் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி அதன் பின்னரே தேர்தல் நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
குதிரைதான் வண்டி இழுக்கும். மாநிலம் தான் தேர்தல் நடத்த வேண்டும். அதுவே நியாமான தேர்தலாக இருக்க முடியும். அரசு ஏன் வண்டியை முன்னரும், குதிரையை பின்னரும் வைக்க நினைக்கிறது" என விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவிட்-19 தடுப்பூசிக்கு இனி ஆதார் எண் தேவையில்லை