புருலியா: மேற்கு வங்க முதலமைச்சர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி மீது பாஜக மாநிலத் தலைவர் திலிப் கோஷ் விமர்சனம் செய்துள்ளார்.
அவர் கூறுகையில், “அவர் (மம்தா பானர்ஜி) என்னிடம் கேளுங்கள் என்றார். தற்போது தீதியை தள்ள முயற்சிகள் நடக்கிறது என்கிறார். நாம் இப்போது சக்கர நாற்காலி அரசை பார்க்கிறோம்.
இந்த சக்கர நாற்காலி அரசாங்கம் எந்தப் பணியையும் செய்யவில்லை. நாங்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறோம்” என்றார். மேலும், பிரதமர் மோடியின் முகத்தை மேற்கு வங்க மக்கள் பார்க்க விரும்பவில்லை என்ற மம்தா பானர்ஜியின் கருத்துக்கும் அவர் பதிலளித்தார்.

அப்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் முகத்தை காண மக்கள் திரண்டுவருகின்றனர். உண்மையில் அவர்கள் மம்தா பானர்ஜியின் முகத்தை காண விரும்பில்லை. அதனால்தான் அவர் கால்களை காட்டுகிறார்.” என்றார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதியும், நிறைவுகட்ட தேர்தல் ஏப்ரல் 29ஆம் தேதியும் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் மே2ஆம் தேதி எண்ணப்படும்.
இதையும் படிங்க: என் மீதான குற்றச்சாட்டுகளை விசாரியுங்கள்- உத்தவ் தாக்கரேவுக்கு, அனில் தேஷ்முக் கடிதம்!