டெல்லி : பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் படி ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் 20.7 லட்சம் கணக்குகளைத் தடைசெய்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தின் கீழ் ஆக. 1 முதல் ஆக. 31 ஆம் தேதி வரையிலான 30 நாள் காலத்திற்கான இரண்டாவது மாதாந்திர அறிக்கையில் பயனர்களிடமிருந்து 420 புகார்கள் வாட்ஸ்அப் மின்னஞ்சல் மற்றும் இந்திய குறைகேட்பு அலுவலருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
அந்தப் புகார்களில் 41 நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. “பயனர் பாதுகாப்பு அறிக்கையில் பெறப்பட்ட பயனர் புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் தகவல் தொழில்நுட்ப துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்துகிறது” என அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜூன் 16 முதல் ஜூலை 31 வரையிலான காலகட்டத்தில், புதிய ஐடி விதிகளுக்கு இணங்க, இந்தியாவில் 30.2 லட்சம் கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில், தீங்கு விளைவிக்கும் அல்லது தேவையற்ற செய்திகளை அனுப்ப முயன்ற 20 லட்சம் கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது.
இதையும் படிங்க : வாட்ஸ் அப் வதந்தியை நம்பி தடுப்பூசி போட திரண்ட மக்கள்: பொள்ளாச்சியில் பரபரப்பு