ETV Bharat / bharat

'இந்தியாவில் என்ன நடக்கிறது' - தாயகம் திரும்பிய பிரதமர் மோடி கேள்வி! - arab countries

அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த பிரதமர் மோடி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) இரவு, டெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

What's happening in India', PM Modi asks after returning from foreign visit
’இந்தியாவில் என்ன நடக்கிறது’ - தாயகம் திரும்பிய பிரதமர் மோடி கேள்வி!
author img

By

Published : Jun 26, 2023, 11:04 AM IST

டெல்லி: பிரதமர் மோடி, அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு மேற்கொண்டு இருந்த 6 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) இரவு, டெல்லி திரும்பினார். இந்த சுற்றுப்பயணத்திடையே, பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்தியா திரும்பிய பிரதமர் மோடிக்கு, டெல்லி விமான நிலையத்தில், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கட்சி எம்.பி.,க்கள் கவுதம் காம்பீர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் என்ன நடக்கிறது என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பிற தலைவர்களிடம் கேட்டு அறிந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்கச் சென்ற பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கூறியதாவது, “இங்கே எப்படி இருக்கிறது என்று பிரதமர் மோடி, நட்டாவிடம் கேட்டதற்கு, கட்சித் தலைவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை, அறிக்கைகளாக, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்த நட்டா, நாடும் மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்’ என்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி., பர்வேஷ் வர்மா கூறியதாவது, நாட்டில் என்ன நடக்கிறது என்றும், கட்சியின் பொதுச் செயல்திட்டம் எப்படி நடக்கிறது என்றும் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அவரிடம் தகுந்த பதில்களை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

ஜூன் 20ஆம் தேதி, அமெரிக்கப் பயணத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி, நியூயார்க்கில், ஜூன் 21ஆம் தேதி, 9வது சர்வதேச யோகா தினத்தை நினைவுகூரும் வகையில், ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். பின்னர், வாஷிங்டன் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தார். இரு நாட்டுத் தலைவர்களும், வியாழக்கிழமை (ஜூன் 22ஆம் தேதி), ஒரு வரலாற்று உச்சி மாநாட்டை நடத்தினர். அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றினார். பின்னர், மோடிக்கு, அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் சிறப்பு விருந்து அளித்து கவுரவித்தார்.

இந்த சுற்றுப்பயணத்தினிடையே, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமையன்று (ஜூன் 24ஆம் தேதி), எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு, பிரதமர் மோடி சென்றடைந்தார். பிரதமர் மோடியை, கெய்ரோ விமான நிலையத்தில், அந்நாட்டு பிரதமர் முஸ்தபா மட்பூலி வரவேற்றார்.

இந்தியா மற்றும் எகிப்து நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் முதலீடுகள், எரிசக்தி உறவுகள் மற்றும் மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்களில், இணைந்து செயல்படுவதற்கான வழிகள் குறித்து, அந்நாட்டு அதிபர் சிசி உடன், பிரதமர் மோடி, ஞாயிற்றுக்கிழமை, பேச்சுவார்த்தை நடத்தினார். அரபு நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் தி நைல்' விருது, பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இது, பிரதமர் மோடி பெறும் 13வது உயரிய அரசு விருது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "போதைப் பொருள் புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" - டிஜிபி சைலேந்திரபாபு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.