ETV Bharat / bharat

அதானி VS ஹிண்டன்பர்க் - நடந்தது என்ன? - FPO Cancel from adani

இந்திய பொருளாதாரத்தை அட்சி செய்த அதானி குழும சாம்ராஜியத்தை, வெறும் 106 பக்க ஆய்வு அறிக்கையால் கண்ணாடி மாளிகையை கல் வீசி சுக்கு நூறாக நொறுக்கியது போல் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் தவிடு பொடியாக்கியது. யார் இந்த ஹிண்டன்பெர்க்...! பார்க்கலாம் ஒரு சிறு செய்தி தொகுப்பில்!

அதானி VS ஹிண்டன்பர்க் - நடந்தது என்ன?
அதானி VS ஹிண்டன்பர்க் - நடந்தது என்ன?
author img

By

Published : Feb 2, 2023, 10:46 AM IST

Updated : Feb 2, 2023, 11:13 AM IST

டெல்லி: அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது ஹிண்டன்பர்க் தடயவியல் மற்றும் பொருளாதார ஆய்வு நிறுவனம். 2017ஆம் ஆண்டு நாதன் ஆண்டர்சன் என்பவர் இந்த ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தை நிறுவினார்.

அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் நகரத்தைச் சேர்ந்த நாதன் ஆண்டர்சன், வணிகம், பங்குச் சந்தை போன்றவற்றில் புலமை பெற்றவராக காணப்படுகிறார். கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகத்தில் பட்டம் பெற்ற நாதன் ஆண்டர்சன், பிரபல வணிக நிறுவனமான பேக்ட்செட் ரிசர்ஜ் சிஸ்டஸ் இன்க் (FactSet Research Systems Inc) என்ற நிறுவனத்தில் நிதித்துறை ஆலோசகராக பணியாற்றி வந்தார்.

வணிகம், பங்குச் சந்தையில் நடக்கும் ஊழல்கள் மற்றும் மோசடிகளை ஆய்வு செய்து வெளி உலக வெளிச்சத்திற்கு கொண்டு வருவதையே தனக்குப் பிடித்தமானத் துறையாக தேர்வு செய்து பணியாற்றத் தொடங்கினார். வங்கிகள் மற்றும் நிதித்துறை சார்ந்த நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகித்த நாதன் ஆண்டர்சன் அதில் இருந்து விலகி கடந்த 2017ம் ஆண்டு வணிக மற்றும் பங்குச்சந்தை ஊழல்களைக் ஆய்வு செய்யும் ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தை நிறுவினார்.

ஹிண்டர்ன்பர்க் நிறுவனம்: ஹிண்டன்பர்க் நிறுவன் இதுவரை 16க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்களின் நிதி நிலைகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன. பங்குச் சந்தையில் இருக்கும் பெருநிறுவனங்களின் மோசடி மற்றும் நிதி முறைகேடுகளை ஆய்வு செய்து, நிறுவனத்தின் பங்குகள் பற்றிய விவரங்களை வெளியிட்டு முதலீட்டாளர்களின் பங்குகள் மற்றும் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய ஹிண்டன்பர்க் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஷார்ட் செல்லிங்(Short Selling) என்ற வணிக முறையில் இடைத்தரகர் போல செயல்பட்டு வீழ்ச்சியாகும் எனக் கருதும் பங்குகளை வாங்கி முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் இல்லாமல் நல்ல லாபத்தில் விற்றுத்தர முயலும் என்றும் சொல்லப்படுகிரது. அதேநேரம் பங்குச் சந்தையில் நல்ல வளர்ச்சியில் உள்ள நிறுவனத்தின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு கைப்பற்ற, ஷார்ட் செல்லிங் முறையை ஹிண்டன்பர்க் நிறுவனம் தவறாக பயன்படுத்துவதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

நிகோலா: கடந்த 2020ஆம் ஆண்டு அமெரிக்க ஆட்டோ மொபைல் சாம்ராஜியத்தில் முக்கிய பங்கு வகித்த, மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான நிகோலா, பங்குச் சந்தையில் செய்த பல்வேறு நிதி மோசடி தொடர்பான உண்மைகள் வெளிக் கொண்ர்ந்ததன் மூலம் ஹிண்டன்பர்க் நிறுவனம் உலகளவில் தனிக் கவனம் பெறத் தொடங்கியது.

இந்நிலையில் இந்திய பெரு நிறுவனமான அதானியின் அடிமடியில் கைவைத்து உள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம், பங்குச் சந்தையில் அதனை ஆட்டம் காணச் செய்துள்ளது. கடந்த முறையில் Adani Group: How The World’s 3rd Richest Man Is Pulling The Largest Con In Corporate History என்ற தலைப்பில் 106 பக்கங்களில் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.

அதானி: இதன் மூலம் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அதானி நிறுவனம் பெரு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அதற்காக பல்வேறு நிதி மோசடிகளில் அதானி நிறுவனம் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளது. இதன் காரணமாக பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் வரலாறு காணாத அளவில் அதளபாதாளத்திற்கு சென்றன.

மேலும் அதானியின் சொத்து மதிப்பு 75 பில்லியன் டாலராக குறைந்து உலக பணக்காரர்கள் பட்டியலில் 15 வது இடத்திற்கு தள்ளப்பட்டார். பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதனிடையே 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக வெளியிட்ட எஃப்.பி.ஓ. எனப்படும் பொது வெளியிட்டை வாபஸ் பெறுவதாக அதானி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பங்கு வெளியீட்டை திரும்பப் பெற்றது அதானி.. முதலிட்டாளர்களுக்கு பணம் வாபஸ்!

Last Updated : Feb 2, 2023, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.