ETV Bharat / bharat

முதல் குடிமகள் முர்முவின் அதிகாரங்கள் என்னென்ன...?

இந்திய நாட்டின் முதல் குடிமகளாக தற்போது பதவியேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு, குடியரசுத் தலைவராக என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

What are the powers of the President
What are the powers of the President
author img

By

Published : Jul 25, 2022, 3:15 PM IST

டெல்லி: இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று (ஜூலை 26) பதவியேற்றார். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா திரௌபதி முர்முவுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

பதவியேற்பு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்திய நாட்டின் முதல் குடிமகளாக தற்போது பதவியேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு, குடியரசுத் தலைவராக என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

முர்முவின் அதிகாரங்கள்: பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில், மாநிலங்களிலும், இந்திய அளவிலும் அவசரச் சட்டங்களை பிறப்பிக்க குடியரசுத்தலைவருக்கு அதிகாரமுள்ளது. அதுமட்டுமின்றி தண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது, அவசர நிலை பிரகடனத்தில் கையெழுத்திடுவது ஆகியவற்றில் அவர் அதிகாரம் பெற்றவர்.

அரசியலமைப்பின் பாதுகாவலராக கருதப்படும் குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற அமர்வுகளைக் கூட்டுவதற்கான அதிகாரங்களையும் பெற்றுள்ளார். ஆயுதப்படைகளின் உச்ச தளபதியாக செயல்படுகிறார்.

அடுத்த முறையும் போட்டியிடலாம்: முப்படைகளின் தலைமைத்தளபதியான முர்முவின் பதவிக்காலம் வரும் 2027 ஜூலை 24 வரை உள்ளது. அதன்பின்னரும், அவர் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட சட்டத்தில் இடம் உள்ளது. முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் மட்டுமே தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.

மேலும், குடியரசுத்தலைவர் பதவியை முர்மு ராஜினாமா செய்ய வேண்டுமெனில், அவர் தனது கடிதத்தை துணை குடியரசுத்தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். அவரைப் பதவியில் இருந்து நீக்கம் வேண்டுமெனில் சட்டப்பிரிவு 61இல் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையின்படிதான் பின்பற்ற வேண்டும் என்பது விதி.

மக்களவையையும் கலைக்கலாம்: மேலும், இந்தியாவின் நிர்வாகத்தை, அதிகாரத்தைப் பெற்றுள்ள முர்முவால் நேரடியாகவோ அல்லது அரசியலமைப்பின்படி அவரின்கீழ் பணிபுரியும் அலுவலர்கள் மூலமாகவோ அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தலாம்.

அரசியலமைப்பு விதிகளின்படி, மத்திய அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில், மக்களவையை கலைக்கும் அதிகாரமும் முர்முவுக்கு உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நேரத்தைத் தவிர, மற்ற எந்த நேரத்திலும் அவசரச் சட்டங்களை வெளியிட அவருக்கு அதிகாரம் உள்ளது.

தண்டனைகள் சார்ந்த பரிந்துரைகள்: நிதி மற்றும் பணம் சார்ந்த மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கும், தண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவதற்கும், சலுகைகள் வழங்குவதற்கும், கால அவகாசம் வழங்குவதற்கும், தண்டனையை விடுவிப்பதற்கும் அல்லது இடைநிறுத்துவதற்கும், சில சந்தர்ப்பங்களில் தண்டனைகளை மாற்றுவதற்கும் அவர் பரிந்துரை செய்யலாம்.

ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பின்படி ஆட்சி நடைபெறவில்லை என்று முர்மு கருதினால், அந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் அல்லது எந்த ஒரு செயல்பாடுகளையும் அவர் தானாக எடுத்துக்கொள்ளலாம். இந்தியா அல்லது அதன் எந்தப் பகுதிக்கும் போர் அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சியால் அச்சுறுத்தல் ஏற்பட்டு அசாதாரண சூழல் நிலவுவதாக முர்மு கருதினால், அவர் அவசரநிலையை பிரகடனப்படுத்தலாம்.

இதையும் படிங்க: '6 மாதங்களில் எனது குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் அடுத்தடுத்து இறந்தார்கள்': மன உறுதி குறித்துப்பேசிய முர்மு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.