ETV Bharat / bharat

புறநகர் ஏசி ரயில்களில் பயணித்தோர் எண்ணிக்கை 1 கோடியைக்கடந்தது - மேற்கு ரயில்வே! - மேற்கு ரயில்வே புதிய சாதனை

நடப்பு நிதியாண்டில் அக்டோபர் 27ஆம் தேதி வரை, மேற்கு ரயில்வேயின் புறநகர் ஏசி ரயில்களில் பயணித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளதாக மேற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

western
western
author img

By

Published : Oct 28, 2022, 5:37 PM IST

மும்பை: மேற்கு ரயில்வேயின் புறநகர் ஏசி ரயில்களில், பயணிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. தினசரி வேலைக்குச்செல்பவர்கள் இந்த ஏசி ரயில்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். பரபரப்பான வேலை நேரங்களில் ஏசி ரயில்கள் நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அக்டோபர் 27ஆம் தேதி வரை, மேற்கு ரயில்வேயின் புறநகர் ஏசி ரயில்களில் பயணித்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளதாக மேற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

மொத்தம் 1 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாகவும், இது கடந்த நிதியாண்டு முழுவதும் பயணித்தவர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, 85 விழுக்காடு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஒரே நாடு, ஒரே காவல்துறை சீருடை பொதுவான அடையாளத்தை அளிக்கும் - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.