ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தில் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் - West Bengal Assembly elections

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல்.22) 7 மணியளவில் தொடங்கியது.

West Bengal Voting
வாக்குப்பதிவு
author img

By

Published : Apr 22, 2021, 7:47 AM IST

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே, ஐந்து கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று (ஏப்ரல்.22) காலை 7 மணியளவில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமாக நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

4 மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளுக்கான தேர்தலில் 306 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதற்காக, 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புக்காக துணை ராணுவ படையினரும், மாநில காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள தொகுதிகளுக்கு 26, 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளன.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசியால் தொழிலதிபர்கள் மட்டுமே பயன் அடைவார்கள் - ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.