ஸ்ரீநகர்: மேற்கு வங்கத்தைச் சார்ந்த லோகேஷ் குமார் என்ற நபர், ஜம்முவில், தான் வேலை பார்க்கும் வீட்டில் இருந்து கைத்துப்பாக்கியை திருடியதாக ஜம்மு காஷ்மீர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது குறித்து காவல் துறையினர், கைது செய்யப்பட்ட நபர் மேற்கு வங்கத்தில் உள்ள அலிபுர்துவார் பகுதியைச் சார்ந்தவர் என்றும், அவர் தற்போது ஸ்ரீநகரில் இருக்கும் இலாஹிபாக் என்ற பகுதியில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், கைதுப்பாக்கி உடன் லோகேஷ் குமார், ரீகல் சௌக் என்னும் இடத்தில் வைத்து காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தான் வீட்டு வேலை பார்க்கும் ஒரு முக்கிய பிரமுகரின் வீட்டில் இருந்து, தான் கைத்துப்பாக்கியை திருடியதும், அந்த கைத்துப்பாக்கி அனுமதி பெற்ற துப்பாக்கி என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
One person namely Lokesh Kumar of Alipurdauar West bengal a/p Elahibagh Soura caught with pistol on a joint naka at Regal chowk in wee hours. He had stolen this pistol same night from the house of a registered license holder. FIR 31/2023 registered at PS Kothibagh. pic.twitter.com/nGsWhRQtAu
— Srinagar Police (@SrinagarPolice) August 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">One person namely Lokesh Kumar of Alipurdauar West bengal a/p Elahibagh Soura caught with pistol on a joint naka at Regal chowk in wee hours. He had stolen this pistol same night from the house of a registered license holder. FIR 31/2023 registered at PS Kothibagh. pic.twitter.com/nGsWhRQtAu
— Srinagar Police (@SrinagarPolice) August 17, 2023One person namely Lokesh Kumar of Alipurdauar West bengal a/p Elahibagh Soura caught with pistol on a joint naka at Regal chowk in wee hours. He had stolen this pistol same night from the house of a registered license holder. FIR 31/2023 registered at PS Kothibagh. pic.twitter.com/nGsWhRQtAu
— Srinagar Police (@SrinagarPolice) August 17, 2023
முன்னதாக கைதுப்பாக்கியின் உரிமையாளர், கைத்துப்பாக்கி காணாமல் போனதை அறிந்து கோதிபாக் என்ற பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், காவல் துறையினர் தன் வீட்டிலேயே பணி செய்யும் நபர் துப்பாக்கியை திருடி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இச்சம்பவம் குறித்து ஸ்ரீநகர் போலீசார் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: RPF Constable Sacked: நான்கு நபர்களை சுட்டுக் கொன்ற ரயில்வே RPF கான்ஸ்டபிள் டிஸ்மிஸ்