ETV Bharat / bharat

Phone surveillance: நாட்டிலேயே முதல்முறையாக விசாரணை ஆணையத்தை உருவாக்கிய மம்தா

author img

By

Published : Jul 26, 2021, 5:52 PM IST

தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க 2 நபர்கள் விசாரணை ஆணையத்தை மேற்குவங்க அரசு உருவாக்கியுள்ளது.

http://10.10.50.85//west-bengal/26-July-2021/768-512-11415925-thumbnail-3x2-mamta2007_2607newsroom_1627286038_562.jpg

கொல்கத்தா (மேற்கு வங்கம்): இஸ்ரேல் நாட்டைச் சார்ந்த என்.எஸ்.ஓ குழுமம் உருவாக்கிய பெகாசஸ் ஸ்பைவேர் செயலி மூலம் நாட்டில் முக்கியப்புள்ளிகள் பலரது தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக விசாரிக்க, மேற்கு வங்க அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது. அந்த கூட்டத்தின் முடிவில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக இரு நபர் விசாரணை ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளதாக, மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளர் நபண்ணா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை ஆணையத்தை உருவாக்கிய பின் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக நாட்டிலேயே முதல்முறையாக மேற்கு வங்க மாநிலமே விசாரணை ஆணையத்தை உருவாக்கியுள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பீம்ராவ் லோகூர் என்பவரும், கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மயி பட்டாச்சார்யாவும் பணியாற்றுபவார்கள் எனத்தெரிவித்தார்.

நாட்டிலேயே முதல்முறையாக ஆணையத்தை உருவாக்கிய மேற்கு வங்கம்

மேலும் இதுதொடர்பாக மம்தா பானர்ஜி விரிவாக பேசுகையில், 'மதிப்புமிக்க இரண்டு நீதிபதிகளையும், தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரிக்க வேண்டும் என்று பணித்தோம். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். இந்த ஆணையம் மிக விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.

கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில், நாங்களும் ஒன்றிய அரசு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்பேரில் நீதி விசாரணை ஆணையத்தை உருவாக்கி விசாரிக்கும் என நம்பினோம். ஆனால், இன்னும் ஒன்றிய அரசு இதுதொடர்பான எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை. நாங்கள் தான் மாநிலங்களிலேயே முதல்முறையாக ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க விசாரணை ஆணையத்தை ஏற்படுத்தியுள்ளோம்.

ஆணையத்தின் பணி என்ன?

இந்த ஆணையம் எவ்வாறு தனிநபர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன, யாருடைய தொலைபேசிகள் எல்லாம் ஒட்டுக்கேட்கப்பட்டன என்பது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்' என்றார்.

மேலும் அவர் இன்று டெல்லியில் இருந்து கிளம்ப இருப்பதாகவும், அதற்கு முன்னர் பாஜகவுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட தலைவர்களையும் கட்சியினரையும் சந்திக்க இருப்பதாகவும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

அதேபோல், பிரதமர் நரேந்திர மோடியுடனும் மம்தா சந்திக்க வாய்ப்புள்ளதாகவும், மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நம்பி நாராயணன் துன்புறுத்தப்பட்ட வழக்கு: சிபிஐ விசாரணைக்கு எஸ் சொன்ன உச்ச நீதிமன்றம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.