ETV Bharat / bharat

மம்தாவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அக். 3: திருணமுல்லில் லப்டப்...! - மேற்குவங்க இடைத்தேர்தல்

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் உள்ளிட்ட அம்மாநிலத்தில் நடைபெற்ற மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணிமுதல் எண்ணப்பட்டுவருகின்றன.

பவானிபூர் இடைத்தேர்தல்
பவானிபூர் இடைத்தேர்தல்
author img

By

Published : Oct 3, 2021, 8:02 AM IST

Updated : Oct 3, 2021, 8:53 AM IST

கொல்கத்தா: மம்தா பானர்ஜியின் அரசியல் செல்வாக்கை பலமாக உணர்த்தும் பவானிபூர் தொகுதியின் வாக்குப்பெட்டியின் சீல் இன்று உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

இதனுடன் சேர்த்து நடைபெற்ற ஜாங்கிபூர், சாம்சர்கஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

தேர்தல் அலுவலருக்கு மட்டுமே செல்போன் அனுமதி

காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புக்கு இடையே நடைபெற்றுவருகிறது. மேற்கண்ட மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் செப்டம்பர் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

வாக்கு எண்ணும் மையத்தில் இருபத்து நான்கு மத்தியப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் அந்தப் பகுதி முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில் வைக்கப்பட்டது.

வாக்கு எண்ணும் அலுவலர்கள் பேனா, தாள் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும், தேர்தல் அலுவலர், பார்வையாளர் செல்போன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

சம்சர்கஞ்சில் அதிகபட்சமாக சுமார் 80% வாக்குகள் பதிவு

கொல்கத்தாவின் சகாவத் நினைவுப் பள்ளியில் நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கை பவானிபூர் தொகுதிக்கு 21 சுற்றுகள், சம்சர்கஞ்சிற்கு 26 சுற்றுகள், ஜாங்கிபூர் தொகுதிக்கு 24 சுற்றுகள் என எண்ணப்பட்டுவருகின்றன.

வாக்கு எண்ணிக்கை

மம்தா போட்டியிட்ட பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 57.09 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக முன்னதாக மேற்குவங்க மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

அதேபோல் சம்சர்கஞ்சில் 79.92 விழுக்காடு வாக்குகளும், ஜாங்கிபூரில் 77.63 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன. தேர்தல் ஆணையத்தின் கருத்துப்படி, மூன்று தொகுதிகளில் மொத்தம் ஆறு லட்சத்து 97 ஆயிரத்து 164 வாக்காளர்கள் உள்ளனர்.

பாஜகவிடம் தோற்ற மம்தா

பவானிபூரில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து ஆறாயிரத்து 456. இதில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 243 ஆண்கள், 95 ஆயிரத்து 209 பெண்கள் ஆவர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோற்றார். இருப்பினும் அவர் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

இந்த நிலையில் முதலமைச்சராகப் பதவியேற்ற ஆறு மாதங்களில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், அவர் பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மம்தாவுக்கு எதிராகக் களமிறங்கிய வழக்கறிஞர்கள்

இந்தத் தொகுதியில் பொதுத்தேர்தலின்போது வென்று வேளாண் அமைச்சராகப் பதவியேற்ற சட்டோபாத்யாய், மம்தா போட்டியிட ஏதுவாக மே மாதம் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

பவானிபூர் தொகுதியில் மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் களம்கண்டவர் 41 வயதான பிரியங்கா திப்ரேவால் என்ற வழக்கறிஞர்.

அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ரீஜிப் பிஸ்வாஸை நிறுத்தியது, இவரும் ஒரு வழக்கறிஞர்தான். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்தத் தேர்தலின் முடிவு மம்தாவின் தலையெழுத்தையும், செல்வாக்கையும் தீர்மானிக்கும் அம்சமாக இருக்கப்போகிறது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. திருணமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இன்றைய நாள் மிக முக்கிய நாளாகத் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.

இதையும் படிங்க: உலகின் செல்வாக்கு மிக்க 100 பேர்- டைம் இதழ் பட்டியலில் இடம் பிடித்த மம்தா, மோடி

Last Updated : Oct 3, 2021, 8:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.