மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. அம்மாநிலத்தில், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்குமா இல்லை பாஜக ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.
அதன்படி, டைம்ஸ் நவ் - சி வோட்டர் நிறுவனம் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 158 இடங்களை கைப்பற்றும் என தெரியவருகிறது.
மேலும், பாஜக 115 இடங்களிலும், இடதுசாரிகள் கூட்டணி 19 இடங்களிலும் வெல்லும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
மேற்குறிப்பிடப்பட்ட கருத்துக்கணிப்புகளுக்கு நேர்மாறாக, ரிபப்ளிக் தொலைக்காட்சி வெளியிட்ட முடிவுகளின்படி, பாஜக 138 முதல் 148 இடங்கள்வரை வென்று ஆட்சி அமைக்கிறது.
திரிணாமுல் காங்கிரஸ் 128லிருந்து 138 இடங்கள்வரையும், இடதுசாரிகள் கூட்டணி 11லிருந்து 21 இடங்கள்வரை வெல்லலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.