ETV Bharat / bharat

மதுக்கடை முன்பு திருமணம்: கரோனா விதிமுறைகளுக்கு எதிரான போராட்டம்! - wedding in front of Beverages outlet

மதுபானக் கடை முன் மக்கள் கூட்டம் அலைமோதுவதை கண்டுகொள்ளாத காவல்துறை, இதையும் கண்டுகொள்ளாது என்பதற்காகவே இங்கு திருமணத்தை நடத்தினோம் என அவர்கள் தெரிவித்தனர்.

wedding in front
wedding in front
author img

By

Published : Jul 6, 2021, 8:30 PM IST

கோழிக்கோடு: கேரளாவில் முன்பு போல் பாரம்பரிய திருமணங்கள் நடத்த முடியாததை கண்டித்து வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.

கரோனா விதிமுறைகள் காரணமாக கேரளாவில் பாரம்பரிய முறையில் திருமணம் நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. புகைப்படக் கலைஞர்கள், சமையல் செய்பவர்கள் என பலரது வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேரள அரசு அனைத்து மதுபானக் கடைகளையும் திறந்துள்ளது. அங்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மக்கள் கரோனா விதிமுறைகளை மறந்து அலைகின்றனர்.

இதன் காரணமாகவே நாங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தோம் என்கின்றனர் அனைத்து கேரள சமையல் கலைஞர்கள் அமைப்பினர். கோழிக்கோடு பகுதியில் இயங்கிவரும் சரோவரம் மதுபானக் கடை முன்பு, பிரமோத் - தான்யா ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டனர். எம்கே ராகவன் எம்பி இதற்கு தலைமை தாங்கினார்.

மதுக்கடை முன்பு திருமணம்: கரோனா விதிமுறைகளுக்கு எதிரான போராட்டம்!

மதுபானக் கடை முன் மக்கள் கூட்டம் அலைமோதுவதை கண்டுகொள்ளாத காவல்துறை, இதையும் கண்டுகொள்ளாது என்பதற்காகவே இங்கு திருமணத்தை நடத்தினோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தெலுங்கில் அடுத்தடுத்து கமிட்டான தனுஷ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.