ETV Bharat / bharat

ஹோட்டல் உரிமையாளரை வாளால் தாக்கியவருக்கு வலைவீச்சு

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஹோட்டல் உரிமையாளரை வாளால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஹோட்டல் உரிமையாளரை வாலால் தாக்கிய நபருக்கு வலைவீச்சு

author img

By

Published : Jul 20, 2021, 9:14 AM IST

புனேவில் உள்ள உர்லிகஞ்சன் பகுதியில் அமைந்துள்ளது ராமதாஸ் ககாடே ஹோட்டல். அந்நிறுவனத்தின் உரிமையாளர் ராமதாஸ் அகாதே(38) ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஹோட்டலுக்கு வெளியே நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

அப்போது வந்த மர்ம நபர் ஹோட்டல் உரிமையாளரை வாளால் கடுமையாகத் தாக்கினார். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழ, இருசக்கர வாகனத்தில் தனது நண்பர்களுடன் மர்ம நபர் தப்பித்து சென்றார்.

ஹோட்டல் உரிமையாளரை வாளால் தாக்கிய நபருக்கு வலைவீச்சு

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், படுகாயமடைந்த ராம்தாஸ் அகாதேவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.