டெல்லி: இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக வடகிழக்கு இந்தியாவின் மேற்கு வங்கம், சிக்கிம், அஸ்ஸாம், மேகாலயா ஆகிய பகுதிகளிலும் இமயமலை மலைத்தொடர்களிலும் ஆகஸ்ட் 27 வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கேரளா, தமிழ்நாடு, மாஹே, கர்நாடகாவின் கடலோர மாவங்களில் இன்றிலிருந்து அடுத்த நான்கு நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்றும் (ஆகஸ்ட் 25), நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன்கூடிய மழை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் புதுச்சேரி, காரைக்கால், நீலகிரி திண்டுக்கல், தேனி, திருப்பூர், சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதையடுத்து ஆகஸ்ட் 28, 29ஆம் தேதிகளில், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நான்கு மாவட்டங்களில் கனமழை