டெல்லி: நாடு முழுவதும் தற்போது கரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளதால், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது, தகுந்த இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி அரசு முன்னதாக காரில் தனியாக செல்பவர்கள் மட்டும் மாஸ்க் அணியத் தேவையில்லை என்று அறிவித்திருந்தது. மேலும், பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.2000 அபராதமும் விதித்தது. இந்நிலையில் தற்போது அது ரூ.500ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் சொந்த கார்களில் செல்லும்போது மக்கள் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை எனவும்; வாடகை கார்களில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
மேலும் கார்களில் தனியாக பயணம் செய்யும் ஓட்டுநர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை எனவும் டெல்லி அரசு கூறியுள்ளது.
இதையும் படிங்க: 'இந்தியா, எந்த நாட்டையும் தாக்கியதில்லை' - ராஜ்நாத் சிங்