ETV Bharat / bharat

மியான்மரில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை விரைவில் மீட்போம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி

மியான்மர் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமென சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவில் மீட்போம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி

author img

By

Published : Sep 21, 2022, 10:05 PM IST

விழுப்புரம்: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியைச்சேர்ந்தவர் ராஜாசுப்பிரமணியன். இவருடைய மகன் தீபமணி (வயது 30). ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தாய்லாந்துக்கு வேலைக்குச்சென்றுள்ளார்.

ஆனால், அங்கே படிப்புக்கு உரிய வேலை வழங்காமல் சட்டத்துக்குப் புறம்பான வேலைகளைக்கொடுத்துள்ளனர். அத்தோடு மின்யான்மர் நாட்டிற்கு தீபமணியை கடத்திச்சென்று சித்ரவதை செய்துள்ளனர். இதுகுறித்து தீபமணி வீடியோ மூலமாக தனது பெற்றோருக்கு கண்ணீருடன் ஓர் காணொலிப் பதிவை அனுப்பி உள்ளார்.

அதில், தன்னுடன் ஏராளமான இளைஞர்கள் இங்கு கடத்தி வரப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாகவும், தன்னை மீட்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தீபமணியின் காணொலியைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவர்கள் இதுகுறித்து புதுச்சேரி மாநில அரசை தொடர்புகொண்டு தனது மகனை மீட்டுதரும்படி கூறியுள்ளனர். மேலும், தீபமணியைப் போன்று 60-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பிணைக் கைதிகளாக மின்யான்மர் நாட்டில் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு எலக்ட்ரிக் சாக் கொடுத்து சித்ரவதை செய்யப்படுவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளதாகவும், இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர் இதுகுறித்து கண்டனம் தெரிவித்ததோடு மியான்மர் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், 'மியான்மரில் சிக்கித்தவிக்கும் இளைஞர்கள் பற்றிய தகவல்களை இந்திய தூதரகத்துக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவில் மீட்போம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி

மியான்மரில் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்கு அரசு சார்ந்த உதவிகளை செய்யத் தயாராக உள்ளோம். அவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கும்பணி தீவிரமாக நடந்து வருகிறது' எனக் கூறினார்.

இதையும் படிங்க: மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்... மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.