ETV Bharat / bharat

என் கணவரின் சாவுக்கு நீதி வேண்டும்- சந்தோஷ் பாட்டீல் மனைவி! - சந்தோஷ் பாட்டீல் மனைவி பேட்டி

'என் கணவரின் மரணத்துக்கு நீதி வேண்டும்' என, கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது நேரடி குற்றச்சாட்டு கூறி உயிரிழந்த சந்தோஷ் பாட்டீலின் மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.

Santosh Patil's wife
Santosh Patil's wife
author img

By

Published : Apr 13, 2022, 4:46 PM IST

பெலகாவி: “என் கணவரின் மரணம் தற்கொலை அல்ல. அது கொலை. என் கணவரின் சாவுக்கு காரணமான ஈஸ்வரப்பா தண்டிக்கப்பட வேண்டும்” என கண்ணீர் மல்க சந்தோஷ் பாட்டீலின் மனைவி கூறினார்.

பாஜக பிரமுகரும் அரசு கான்ட்ராக்டருமான சந்தோஷ் பாட்டீல் தற்கொலையால் உயிரிழந்தார். அவர் எழுதியிருந்த தற்கொலை கடிதத்தில், “ரூ.4 கோடி ஒப்பந்தப் பணிகளுக்கு 40 சதவீதம் வரை கமிஷன் கேட்கின்றனர்.

கமிஷன் கொடுக்கவில்லையெனில் பணிக்கு செலவிட்ட பில்களை க்ளீயர் செய்து கொடுக்க மறுக்கின்றனர். என் சாவுக்கு அமைச்சர் ஈஸ்வரப்பாவும், மற்றொருவரும் நேரடிப் பொறுப்பு எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சந்தோஷ் பாட்டீலின் மனைவி ஜெயஸ்ரீ பாட்டீல், “என் கணவரின் மரணம் தற்கொலை அல்ல... அது கொலை.. என் கணவரின் சாவுக்கு காரணமாக ஈஸ்வரப்பா தண்டிக்கப்பட வேண்டும். வெளியில் கடன் வாங்கி வீடு கட்ட வேண்டும்.

அந்தப் பணத்தில் வீடு கட்டி குடியேற நினைத்தோம். ஆனால் அவர் எங்களையெல்லாம் விட்டுவிட்டு நிரந்தரமாக பிரிந்துவிட்டார். நானும் எனது மகனும் அனாதை ஆகிவிட்டோம். எங்களுக்கு நீதி வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய சந்தோஷ் பாட்டீலின் தாயார், “எனக்கு என் மகன் வேண்டும், அவன் தற்கொலை செய்துகொள்பவன் அல்ல., அவன் சாவுக்கு நீதி வேண்டும்” என வலியுறுத்தினார்.

  1. இதையும் படிங்க : கர்நாடக கான்ட்ராக்டர் தற்கொலை; உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கோரும் காங்கிரஸ்!
  2. கர்நாடக கான்ட்ராக்டர் மரணம்: அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.